தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது

1 mins read
9f0ba7ac-bba6-4cfa-b586-9df32f8a8938
விமானத்தில் 170 பேர் பயணம் செய்ததாக நம்பப்படுகிறது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

சென்னை: சென்னையிலிருந்து சிங்கப்பூர் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் வெள்ளிக்கிழமை அவசரமாக சென்னையில் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை விமானிகள் உடனடியாகக் கண்டறிந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானிகள் உடனடியாக விமான நிலையத்துடன் தொடர்புகொண்டு சென்னை விமான நிலையத்துக்குச் செல்ல முடிவு செய்தனர் என்று ஃபினான்ஷியல் எக்ஸ்பிரஸ் தகவல் வெளியிட்டது.

விமானத்தில் பயணிகள், விமானச் சிப்பந்திகள் உட்பட 170 இருந்தனர். அந்த விமானம் சென்னையில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

இதையடுத்து பொறியியலாளர்கள் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை ஆராய்ந்து வருகின்றனர். கோளாறு சீர் செய்யப்பட்டதும் விமானம் மீண்டும் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பற்றி விமான நிறுவனம் விவரம் எதுவும் வெளியிடவில்லை.

மற்றொரு விமானம் மூலம் பயணிகள் சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானி தக்க தருணத்தில் எடுத்த முடிவை பயணிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்