தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவுக்குள் ஊடுருவிய ஆறு கோடி பங்ளாதேஷ் குடிமக்கள்

2 mins read
ec97a127-3f60-4af7-8110-2a08273d80d2
கடந்த டிசம்பர் மாதம் டெல்லியில், சட்டவிரோதமாக தங்கியிருந்த பங்ளாதேஷ் குடிமக்கள் ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறிய பங்ளாதேஷ் குடிமக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஆறு கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இவர்கள் வசிப்பதாக உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்து தமிழ், டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவுக்கும் பங்ளாதேஷுக்கும் இடையே 4,096 கிலோ மீட்டர் தூரத்துக்கு எல்லைப் பகுதி அமைந்துள்ளது. அசாம், மேற்கு வங்கம், மிசோரம், மேகாலயா, திரிபுரா மாநிலங்கள் அந்த எல்லைப்பகுதிக்கு அருகே அமைந்துள்ளன.

இந்த மாநிலங்கள் மூலமாக இந்தியாவுக்குள் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பங்ளாதேஷ் குடிமக்கள் சட்டவிரோதமாக ஊடுருவுவதாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு இந்தியாவுக்குள் நுழைய முகவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை கொடுக்கத் தயாராக உள்ளனர் என்றும் ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை ஆகிய ஆவணங்களைப் பெறுவதற்கு பத்தாயிரம் ரூபாய் வரை அளிக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆவணங்களைப் பயன்படுத்தி சிலர் கடப்பிதழ்கூட பெற்று இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கம், அசாம் மாநிலங்களில் உள்ள பல்வேறு முகவர்கள் மூலம் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் பங்ளாதேஷ் குடிமக்கள் பின்னர் அந்தந்த மாநிலங்களிலேயே நிரந்தரமாகக் குடியேறி தொழிலாளர் களாகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்த ஊடுருவல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியானதையடுத்து சட்ட விரோத குடியேறி களைக் களையெடுக்கும் நட வடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

டெல்லி, மும்பை, தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் உட்பட பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையின்போது ஏராளமான கள்ளக்குடியேறிகள் பிடிபட்டுள்ளனர்.

அவர்களில் பலர் சிறைக்குச் சென்றாலும் சில மாதங்களில் பிணை பெற்று வெளியே வந்து விடுகின்றனர் என்றும் கள்ளக் குடியேறிகளை வெளியேற்ற கடுமையான சட்டங்கள் இல்லை என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இந்தியாவில் சட்ட விரோதமாக வசிக்கும் பங்ளாதேஷ் குடிமக்கள் தொடர்பாக இந்திய அரசிடம் தெளிவான விவரங்கள் இல்லை என்றாலும், நாடு முழுவதும் ஏறக்குறைய இரண்டு முதல் ஆறு கோடிக்கும் மேற்பட்ட கள்ளக்குடியேறிகள் இருக்கக்கூடுமென கணக்கிடப்பட்டுள்ளது.

குறிப்பாக மேற்குவங்கம், அசாம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில்தான் பங்ளாதேஷ் மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர் என்றும் தங்களுக்காக வீடுகளை கட்டிக்கொண்டு நிரந்தரவாசியைப் போல் தங்கி இருப்பதாகவும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பங்ளாதேஷ் எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவும் அச்சுறுத்தல் நிலவுகிறது. இதையடுத்து அந்நாட்டுடனான எல்லைப் பகுதியில் கண்காணிப்பும் சுற்றுக்காவல் பணியும் தீவிரமடைந்துள்ளன,” என்று உளவுத்துறை வட்டாரங்களை மேற்கோள் காட்டி ‘இந்து தமிழ்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்