இந்தியாவில் வெயில் கொளுத்துகிறது; சில பள்ளிகளுக்கு விடுமுறை

இந்தியாவில் வெயில் கொளுத்துகிறது; சில பள்ளிகளுக்கு விடுமுறை

1 mins read
03cb9f4b-de52-4066-ad93-c1b0799bff53
படம்: EPA-EFE -

இந்தியாவில் வெயில் வாட்டிவதைக்கத் தொடங்கியுள்ளது. தற்போது அந்நாட்டின் பல நகரங்களில் வெயில் 40 டிகிரி செல்சியசுக்கு மேல் உள்ளது.

அதிக வெப்பநிலை காரணமாக சில பகுதிகளில் பள்ளிகளுக்கு ஒரு வாரம் வரையிலான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. மேற்கு வங்கம், திரிபுரா மாநிலங்களில் வழக்கத்தை விட தற்போது ஐந்து டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் உள்ளது.

இந்தியாவில் மார்ச் மற்றும் மே மாதங்களில் வெப்பக் காற்று அதிகமாக இருக்கும் என்று அந்நாட்டு வானிலை நிலையம் தகவல் வெளியிட்டிருந்தது.

பருவநிலை மாற்றத்தால் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அதிக வெப்பத்தால் பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்தும் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்