தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

விண்வெளி உத்தி: குறைந்த செலவுள்ளசிறிய செயற்கைக்கோள்களில் இந்தியா கவனம்

2 mins read
598ccee4-1406-462d-9377-634bb74379ab
2019 கடந்த ஜூலை 22ஆம் தேதி சந்திராயன்-2 செயற்கை கோளை விண்வெளியில் பாய்ச்சியது. சிறிய அளவில் குறைந்த செலவில் உலக நாடுகளுக்கு சேவை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

பெங்களூரு: இந்தியாவின் விண்வெளி உத்தி வித்தியாசமானது.

ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) போன்ற பெரிய நிறுவனங்களுடன் போட்டி போடாமல் விண்வெளித் துறையில் உள்ள மற்ற வாய்ப்புகளைக் கைப்பற்ற இந்திய விண்வெளித் துறை திட்டமிட்டுள்ளது.

அந்த வகையில் சிறிய செயற்கைக்கோள்களைத் தயாரித்து அவற்றை குறைவான செலவில் பூமியின் சுற்றுப் பாதையில் நிலைநிறுத்தும் வியாபார நடவடிக்கைகளில் அது ஈடுபடும்.

குறிப்பாக, தொலைத் தொடர்பு, வேளாண்மை போன்ற தரவுகள் அதிகம் தேவைப்படும் துறை களுக்கு கட்டுப்படியாகக் கூடிய சேவைகளையும் வன்பொருள்களையும் வழங்குவது இந்திய விண்வெளித் துறையின் நோக்கமாகும்.

இந்தியா குறி வைக்கும் சிறிய செயற்கைகோள்களை ஏவும் சந்தையின் மதிப்பு 2031ஆம் ஆண்டில் 14.54 பில்லியன் டாலர். அதன் தொடர்பான தரவுச் சேவைகளின் சந்தை மதிப்பு 2030ஆம் ஆண்டில் 45 பில்லியன் டாலர்.

“போயிங் விமானம் போன்று பெரிய அளவுள்ள செயற்கைக்கோளிலிருந்து கையடக்கக் கணினி போன்ற செயற்கைக்கோளுக்கு உலகம் மாறியிருக்கிறது,” என்று இந்திய விண்வெளி சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஏகே பட் கூறியுள்ளார்.

“இத்தகைய துறைகளில் இந்தியா வெற்றி பெற முடியும். உலகப் பணக்காரர் எலன் மாஸ்க் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் போட்டி போடுவதைவிட இதுவே சிறந்தது என்றார் அவர்.

தரவுகளைக் கையாள்வதிலும் அவற்றை நடைமுறைக்குப் பயன்படுத்துவதிலும் இந்தியா ஏற்கெனவே கைதேர்ந்த அனுபவங்களைக் கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்தியாவின் விண்வெளித் துறை கடந்த பிப்ரவரியிலிருந்து தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்தத் துறையில் நுழையும் நிறுவனங்களுக்காக 10 பில்லியன் ரூபாய் நிதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் மனிதர்களை வைத்து ஆய்வு செய்யவும் சுக்கிரன் கிரகத்திற்கு ஆய்வு கலத்தை அனுப்பவும் இந்தியா திட்டங்களை வைத்துள்ளது.

இருந்தாலும் வளர்ந்துவரும் வர்த்தக ரீதியிலான விண்வெளித் துறையில் அது கவனம் செலுத்தி வருகிறது.

பெல்லாடிரிக்ஸ், ஏரோஸ்பேஸ், பிக்ஸல், அக்னிகுல் காஸ்மோஸ், துருவா ஸ்பேஸ் மற்றும் இதர நிறுவனங்கள் ஏற்கெனவே சிறிய அளவிலான செயற்கைகோள்களை ஏவியிருக்கின்றன அல்லது செயற்கைக்கோளின் உதிரி பாகங்களைத் தயாரித்து வருகின்றன.

இஸ்ரோ என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், கடந்த மாதம் சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் பாய்ச்சும் 3வதும் இறுதியுமான விமானத்தை மேம்படுத்தும் இறுதி வேலைகளை முடித்துள்ளன. இதன் வடிவமைப்பு பற்றி பின்னர் தனியார் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்