மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி; பெண்கள் பாதுகாப்புக் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி

மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி; பெண்கள் பாதுகாப்புக் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி

படம்: விகடன்

10 Nov 2026 - 7:27 pm

1 mins read

சென்னை: கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் மதுபோதையில் அவரது இல்லத்திற்குச் சென்று அச்சுறுத்தியதாகவும் தமிழக வெற்றிக் கழகச் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ்மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

அக்குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ள அருள் விக்னேஷ், இது திராவிட முன்னேற்றக் கட்சியின் (திமுக) சதி என்றும் பொய்யான பழி என்றும் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலையத்தை மாற்ற தாம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதால் தம்மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக அவர் கூறினார்.

பெண் ஆட்சியர் ஒருவருக்கே பாதுகாப்பில்லாத நிலை தமிழக அரசின் நிர்வாக அவலத்தைக் காட்டுவதாக தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் உடனடியாகத் தலையிட்டு வெளிப்படையான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தவறிழைத்தவர்மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) ஆட்சியில் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கடுமையாக விமர்சித்தார்.

குறிப்புச் சொற்கள்