மொனாக்கோ: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியில் காலி றுதிக்கு முந்திய சுற்றில் இங்கி லாந்தின் மான்செஸ்டர் சிட்டியை பிரெஞ்சு அணியான மொனாக்கோ தோற்கடித்து வெளியேற்றியுள்ளது. நேற்று அதிகாலை பிரான்சில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத் தில் மொனாக்கோ 3-1 எனும் கோல் கணக்கில் வாகை சூடியது. இங்கிலாந்தில் இவ்விரு அணி களுக்கும் இடையிலான முதல் ஆட்டம் 5-3 எனும் கோல் கணக்கில் சிட்டிக்குச் சாதகமாக முடிந்தது. இதன் விளைவாக சிட்டிக்கும் மொனாக்கோவுக்கும் இடையிலான ஆட்டம் 6-6 எனும் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கையுடன் சம நிலையில் முடிந்தது.
வெளியேறியது சிட்டி
1 mins read

