இலங்கை கடற்படை தாக்குதல்: மீனவர்கள் மத்தியில் அச்சம்

இலங்கை கடற்படை தாக்குதல்: மீனவர்கள் மத்தியில் அச்சம்

1 mins read

ராமேசுவரம்: இலங்கை கடற்படையினருக்கு அஞ்சி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லத் தயங்குவதாக செய்தி வெளியாகியுள்ளது. அண்மைக்காலமாக தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதல் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. பிரிட்ஜோ என்ற மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் பல மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்கள் மத்தியில் அச்சம் நிலவுவதால், நேற்று முன்தினம் ராமேசுவரத்தில் இருந்து இருநூறுக்கும் குறைவான படகுகளே கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றன. ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 800க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க அன்றாடம் கடலுக்குச் செல் வது வழக்கம்.