உலகமே சிரிக்கும் வகையில் விவசாயிகள் போராட்டம்: அய்யாக்கண்ணு எச்சரிக்கை

உலகமே சிரிக்கும் வகையில் விவசாயிகள் போராட்டம்: அய்யாக்கண்ணு எச்சரிக்கை

1 mins read
ef59aa2f-ca52-4b18-bb70-ee502aec5150
-

சென்னை: தமிழக விவசாயிக ளின் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என விவசாயி அய்யாக்கண்ணு கெடு விதித் துள்ளார். சென்னையில் செய்தியாளர் களிடம் பேசிய அவர், ஒரு வாரத்துக்குள் தங்கள் கோரிக் கைகளை நிறைவேற்றாவிட்டால் உலகமே சிரிக்கும் வகையில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார். பயிர்க் கடன்கள் ரத்து, நதி கள் இணைப்பு உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மத்திய, மாநில அரசுக ளுக்கு எதிராக விவசாயி அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த சில மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

தேசிய, தென்னிந்திய நதி கள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவ ரான அய்யாக்கண்ணு தலைமை யில் டெல்லியில் அண்மையில் நடந்த தொடர் போராட்டம் பிற மாநில விவசாயிகளின் கவனத் தையும் ஈர்த்தது. இந்நிலையில் சென்னையில், வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு, செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆகியோரை விவசாயிகள் சந்தித்துப் பேசி னர். இதையடுத்து அளித்த பேட்டியில், விவசாயிகளிடம் போரா ட்ட உணர்வைத் தூண்டிய வ.உ.சிதம்பரனார் பெயரில் விருதை உருவாக்கி விவசாயிக ளுக்கு விருது வழங்க வேண் டும் என்று அரசிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகக் கூறினார். "அமைச்சரும் அதிகாரியும் உறுதி அளித்தபடி ஒரு வாரத் தில் எங்கள் கோரிக்கைகளுக் குத் தீர்வு கிடைக்க வேண்டும். இல்லையெனில் சென்னை சேப்பாக்கம் பகுதியில் உலகமே பார்த்துச் சிரிக்கும் அளவுக்கு மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.