எல்லை தாண்டிய பயங்கரவா தத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான இருதரப்பு கிரிக் கெட் தொடர் நடைபெறாது என்று இந்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் தெரி வித்துள்ளார். இரு நாடுகளும் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் பங் கேற்று கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகின்றன. 2007ஆம் ஆண் டுக்குப் பிறகு அப்படியொரு கிரிக்கெட் தொடர் நடைபெற வில்லை. இருப்பினும் 2012=13ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணி நல்லெண்ண அடிப்படையில் இந்தியா வந்து மூன்று ஒருநாள் போட்டிகளிலும் இரண்டு டி20 போட்டிகளிலும் பங்கேற்றது.
அதன்பின்னர் இருதரப்புப் போட்டி கள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன. பின்னர் 2014ஆம் ஆண்டு இரு நாட்டு கிரிக்கெட் வாரியங் களும் ஒப்பந்தம் ஒன்றில் கையெ ழுத்திட்டன. 2015ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை ஆறு முறை இருதரப்பு கிரிக்கெட் தொடர்களை நடத்துவது என்பதே அந்த ஒப்பந்தம். இதில் நான்கு தொடர்களை பாகிஸ்தானில் நடத்த ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களை பாகிஸ்தான் ஆதரித்து வருவதாகக் கூறி அந்தத் தொடருக்கு இந்திய அரசு அனுமதி வழங்காமல் தாம தித்து வந்தது. இந்நிலையில், நேற்று செய்தி யாளர்களிடம் பேசிய திரு விஜய் கோயல், எல்லை தாண்டிய பயங் கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத் தும் வரை இந்தியா=பாகிஸ்தான் இடையிலான இருதரப்பு கிரிக் கெட் தொடர் நடைபெறாது என் பதைத் தெளிவாகக் கூறிக்கொள் கிறேன்.

