இணைந்து செயல்பட அழைக்கிறார் கமல்

இணைந்து செயல்பட அழைக்கிறார் கமல்

1 mins read
3070ce5a-082c-4adb-83aa-3f05259002e5
-

சென்னை: அரசியல் களத்தில் இணைந்து செயல்பட வருமாறு நடிகர் கமல் தம்மை அழைப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறினார். சென்னையில் நேற்று நடை பெற்ற நடிகர் சிவாஜிகணேசன் மணிமண்டபத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய அவர், அரசியல் வெற்றிக்கு எது தேவை என்பது கமலுக்குத் தெரியும் என்றார். சென்னை அடையாரில் அமைக்கப்பட்டுள்ள இந்த மணிமண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார். இந்நிகழ்வில் பேசிய ரஜினி, சினிமாவில் கிடைத்த பெயரும் புகழும் மட்டும் அரசியல் வெற்றிக்குப் போதுமானதல்ல என்றார். இந்த நிகழ்வில் ரஜினியும் கமலும் பங்கேற்பது சந்தேகம் தான் எனக் கூறப்பட்டது. தமி ழக ஆட்சியாளர்களை கமல்ஹா சன் தினமும் கடுமையாக விமர் சித்து வருவதால் இப்படியொரு சந்தேகம் எழுந்தது. எனினும் இருவரும் தமிழக அமைச்சர்களுடன் ஒரே மேடை யில் காட்சியளித்ததும் அவர் கள் ஆற்றிய உரையும் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதல்வர் பன்னீர்செல்வம், நடிகர்கள் ரஜினி, கமல். படம்: தகவல் ஊடகம்