நாகர்கோயில்: கன்னியாகுமரி திருவனந்தபுரம் நான்கு வழிச் சாலை அமைப்பதற்காக 14,000 மரங்களை வெட்டுவதற்கு மட்டும் அனுமதி பெறப்பட்டுள்ள நிலையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்படு கின்றன என்று இயற்கை பாது காப்பு அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் லால்மோகன் கூறினார். மேலும் 200 குளங்களும் அழியும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம் நான்கு வழி சாலை அமைத்து முடிக்கும் போது குமரி மாவட்டம் வறண்ட பாலைவனமாக மாறி விடும் என்று இயற்கை ஆர்வலர் கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி, திருவனந்த புரம் நான்கு வழி சாலை அமைக் கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தச் சாலையை அமைக்கும் பணியில் 76 குளங்கள் நேரடியாகவும் 200க்கும் மேற் பட்ட குளங்கள் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிறது. அதாவது 76 குளங்கள் மண்ணால் நிரப்பப்படும்போது தண்ணீர் வரும் பாதைத் தடைபட்டு 200 குளங்கள் பாதிக்கப்படுகிறது. மேலும் 14,000 மரங்கள் வெட்ட அனுமதி பெற்றிருந்த போதும், ஒரு லட்சம் மரங்கள் வெட்டப்படுவதாகக் கூறப்படு கிறது. கன்னியாகுமரி அருகே ஈத்தங்காடு பகுதியில் 50 ஆண்டுகளுக்கும் மேலான பெரிய மரங்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.

