கொசுக்களால் பரப்பப்படும் மலேரியாவை சில வினாடி களுக்குள் சோதித்து அறிய உதவக்கூடிய புதிய கருவி ஒன்றை கோல்கத்தாவில் உள்ள இரண்டு ஆய்வுக் கழகங்களின் ஆய்வாளர்கள் கண்டுபிடித் துள்ளனர். அந்தக் கருவியின் மூலம் மலேரியா நோய்க்கான பரி சோதனையை மேற்கொள்ள ஆகும் செலவு வெறும் 10 ரூபாய் மட்டுமே என்பது கூடுதல் சிறப்பு. பொறியியல், நிர்வாகக் கழகம், ஷிப்பூரில் உள்ள இந்தியப் பொறியியல் அறிவியல், தொழில் நுட்பக் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த ஆய்வாளர் குழு இந்தக் கருவியைக் கண்டுபிடித்துள்ளது. இதில் சில மாற்றங்களைச் செய் வதன் மூலம் டெங்கித் தொற்று உள்ளதா என்பதையும் கண்டறிய இயலும் என்று கூறப்படுகிறது.
காகித நுண்ணோக்கி ஒன் றுடன் கைபேசிகளில் பயன்படுத்தப் படக்கூடிய கேமரா ஒன்றைப் பொருத்தி இந்தக் கருவியை ஆய்வாளர் குழு வடிவமைத் துள்ளது. "கிருமித்தொற்று இருக்கிறதா என்பதைக் கண்டறிய, ரத்த மாதிரியுடன் சில ரசாயனங்களை ஒரு வில்லையில் கலந்து காகித நுண்ணோக்கியுடன் இணைக்கப்பட்ட கேமரா மூலம் படம் பிடிக்கப்படுகிறது. பின்னர், அந்தப் படத்தை நுண்ணோக்கியில் காண்பதன் மூலம் தேவையான தகவல்கள் சேகரிக்கப்படுகிறது. பின்னர் அந்தத் தகவல்களைக் கொண்டு, கணினியின் உதவி யோடு மலேரியா தொற்று இருக் கிறதா என்பதை எளிதாகக் கண் டறிய முடியும்," என்று ஆய்வில் பங்கேற்ற டாக்டர் அரின்டாம் பிஸ்வாஸ் கூறினார்.

