திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நரசிங்காபுரம் ரயில் நிலையம் செல்லும் வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையில் வீசப்பட்டிருந்தன. அவற்றை வீசியது யார்? அவை யாருக்குச் சொந்தமானவை என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாக்காளர் அட்டைகள் தேனி, போடி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த வாக்காளர்களின் அட்டை என்பது தெரிய வந்துள்ளது. படம்: தகவல் ஊடகம்
குப்பையில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்
09 Nov 2017 - 6:00 am
1 mins read
