புதுடெல்லி: பட்டேல் சமூகத் தைச் சேர்ந்த மக்களின் கோரிக்கையை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது. தங்கள் சமூகம் கேட்ட இடஒதுக்கீட்டை வழங்க காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொண்டுள்ளதாக படிடர் அன மட் அந்தோலன் சமிதி அமைப் பின் தலைவர் ஹர்திக் பட்டேல் கூறியுள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் விரிவாக தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கும் என்று பட்டேல் இட ஒதுக்கீடு போராட்டக் குழுவின் தலைவர் ஹர்திக் பட்டேல் கூறினார். "ஆட்சிக்கு வந்தால் ஒரு மாதத்தில் இடஒதுக்கீடு வழங் கும் மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தோம். அதை அக்கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.
"காங்கிரசுக்கு வெளிப்படை யான ஆதரவை நாம் அறிவிக்கா விட்டாலும் நாம் பாஜகவுக்கு எதிராகப் போராடுகிறோம். எனவே நேரடியாக அல்லது மறைமுகமாக நாங்கள் காங் கிரசைத்தான் ஆதரிக்கிறோம். ''குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும் என்பது தான் எங்கள் முதல் இலக்கு," என்றார் ஹர்திக் பட்டேல். குஜராத்தில் பட்டேல் சமூ கத்தினர் இடஒதுக்கீடு போராட் டம் நடத்தியபோது, அந்தப் போராட்டத்தை திரும்பப் பெறக் கோரி பாஜக ரூ.1,200 கோடி ரூபாய் பேரம் பேசியதாக மீண் டும் குற்றம்சாட்டிய ஹர்திக், பட்டேல் சமூகத்தை வஞ்சிக்க நினைக்கும் பாஜக அரசை வீட் டுக்கு அனுப்புவோம் என்றார்.

