கடைகளில் விற்பனை செய்யப்படும் கோழிக்கறி மூலமாக இந்தியாவில் கொரோனா கிருமி பரவுவதாக, சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது.
கொரோனா அச்சம் காரணமாக, பலர் கோழிக்கறி சாப்பிடுவதை நிறுத்தி விட்டனர். இதனால், இந்தியாவில் கோழிக்கறி விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
இதனையடுத்து கோழிக்கறியில் கொரோனா கிருமி இருப்பதாக வதந்தி பரப்புவோர் மீது போலிசார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். இதேபோல் மக்களிடம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா கிருமி தொடர்பான அச்சத்தை போக்கும் வகையிலும், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும் தெலுங்கானா மாநிலத்தில் மந்திரிகள் பொது மேடையில் கோழிக்கறி சாப்பிட்டனர்.
ஐதராபாத்தில் பிராய்லர் கோழி விற்பனை நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தெலுங்கானா அனைச்சர்கள் கே.டி.ராமா ராவ், எடிலா ராஜேந்தர், தலசானி ஸ்ரீனிவாஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
#தெலுங்கானா #அமைச்சர்கள் #கோழி #கொரோனா

