மும்பை தாராவி பகுதிக்குள் நுழைந்த கொரோனா கிருமி

1 mins read
7da27504-4ccd-44bc-8fd5-f9371a630233
வீடுகளுக்குள்ளிருந்து சன்னல்வழி எட்டிப்பார்க்கும் தாராவி மக்கள். படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 3

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா கிருமித் தொற்று ஊடுருவி உள்ளது.

அங்கு இதுவரை 13 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

600 ஏக்கர் பரப்பளவு மட்டுமே கொண்டுள்ள இந்தக் குடிசைப் பகுதியில் சுமார் 15 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

இவர்களில் கணிசமான எண்ணிக்கையில் தமிழர்களும் உள்ளனர்.

இந்தக் குடிசைப் பகுதியில் கொரோனா கிருமி தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் பெரிய அளவில் உயிரிழப்புகள் ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இது தாராவியில் வசிக்கும் ஏழை மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

அங்கு நோய்த்தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அடைபட்ட சாக்கடைகள், பொங்கி வழியும் குப்பைத்தொட்டிகள் ஆகியவற்றுக்கிடையே வசிக்கும் தாராவி மக்களிடம் கொரோனா கிருமித்தொற்று பற்றிய அச்சம் அதிகரித்துள்ளது.

கிருமித்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த எங்களுக்கு சக்தியில்லை என்கிறனர் அந்தப் பகுதி மக்கள்.

அங்கு வசிக்கும் பலரும் பாதுகாவல் அதிகாரிகளாகவும் அருகில் இருக்கும் பகுதிகளில் வீட்டு வேலைகள் செய்பவர்களாகவும் இருக்கின்றனர்.

கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் 21 நாட்களுக்கு ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தாலும் நெரிசலான தாராவி தெருக்களில், உணவுப்பொருட்களை வாங்க மட்டுமே வெளியில் சென்றாலும் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது என்பது கற்பனைக்கும் எட்டாதது என்று கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்