வெளிநாடுவாழ் தமிழர்கள் இந்தியாவுக்குத் திரும்ப விரும்பினால் பதிவு செய்ய தமிழக அரசு அழைப்பு

கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் நாடு திரும்புவதற்காக தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு ஒன்றைச் செய்துள்ளது.

குறிப்பாக வளைகுடா நாடுகளில் ஏராளமான தமிழர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

அவ்வாறு நாடு திரும்ப விரும்புவோர் https://nonresidenttamil.org/home என்ற இணையப்பக்கத்துக்குச் சென்று, தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவுசெய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “கொரோனா தொற்றைத் தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுப்பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் இந்தியா திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

“அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களில் உடனடியாகத் தமிழ்நாட்டிற்குத் திரும்ப விரும்புவோரின் நலனுக்காகவும் அவர்களின் குடும்பத்தினரின் நலனைக் காத்திடும் நோக்கிலும் அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும் நாடு திரும்புவோருக்குத் தனிமைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்தவும் அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காகவும் இணையப் பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது,” எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனாலும், விமானப் போக்குவரத்துச் சேவை மீண்டும் தொடங்கிய பின்னரே அவர்கள் தமிழகம் திரும்ப முடியும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!