சுடச் சுடச் செய்திகள்

சீனா படை குவிப்பு: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

எல்லையில் சீனா தனது படைகளைக் குவித்து வருவதன் எதிரொலியாக முப்படைகளின் தலைமைத் தளபதியான பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவிலுள்ள தனது குடிமக்களைத் திரும்ப அழைத்துள்ள சீனா, இந்திய எல்லையில் படைகளைக் குவித்து வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, சீனாவின் எதிர்ப்பை மீறி சாலை உள்ளிட்ட கட்டமைப்புப் பணிகளைத் தொடர இந்தியா முடிவு செய்துள்ளது.

சிக்கிம், உத்தரக்காண்ட், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் எல்லை அருகே நடந்துவரும் எந்தக் கட்டமைப்புப் பணிகளையும் நிறுத்த வேண்டாம் என ராணுவத் தலைமைக்கு தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

எல்லையோரம் சாலை அமைக்க சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக, இம்மாதம் 5ஆம் தேதி கிழக்கு லடாக்கில் இந்திய-சீன படைகள் இடையே மோதல் நடந்தது.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon