கல்வான் பள்ளத்தாக்கை ஒட்டிய எல்லைப் பகுதியில் சீனா பல்வேறு கட்டமைப்பு பணியில் ஈடுபட்டது செயற்கைக்கோள் வரைபடங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
எல்லைப் பகுதியில் சீனா சில சாலைகள் அமைத்து வருவதும் கல்வான் நதியில் அணை கட்டுவதற்கான பணிகளை மேற்கொண்டிருப்பதாகவும் செயற்கைக் கோள் வரைபடங்கள் தெரிவிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அண்மைய மோதலின் போது வீரர்கள் பனிப்பாறைகளை தூக்கி வீசியதாகவும் வீரர்கள் சிலர் பனிப்பள்ளங்களில் தூக்கி வீசப்பட்டதாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறந்த மற்றும் காயமடைந்த வீரர்களை கொண்டு செல்ல 'ஆம்புலன்ஸ்' உள்ளிட்ட பல வாகனங்கள் இருதரப்பிலும் காணப்பட்டதாகவும் சீனாவின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிக வாகனங்கள் இருந்தது என வரைபடங்கள் மூலம் தெரிய வந்திருப்பதாகவும் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

