'கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்குச் சொந்தமானது'

'கல்வான் பள்ளத்தாக்கு இந்தியாவுக்குச் சொந்தமானது'

1 mins read
a6d236d7-9aa3-4de3-b0c8-2133f0a2bb66
அண்மைய மோதல் நிகழ்ந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் இந்தியாவுக்குச் சொந்தமானது என இந்திய வெளியுறவு அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. கல்வான் பள்ளத்தாக்கின் செயற்கைக்கோள் புகைப்படம்: ஏஎஃப்பி -

அண்மைய மோதல் நிகழ்ந்த கல்வான் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் இந்தியாவுக்குச் சொந்தமானது என இந்திய வெளியுறவு அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, கல்வான் பள்ளத்தாக்கு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்றார்.

அப்பள்ளத்தாக்குக்கு சீனா உரிமை கோருவதை ஏற்க இயலாது என்று குறிப்பிட்டுள்ள அவர், எல்லைப் பகுதியில் பல ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய ராணுவத்தினருக்கு எந்தப் பகுதி இந்தியாவுக்கு உட்பட்டது என்பது நன்கு தெரியும் என கூறியுள்ளார்.

லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் சீன வீரர்கள் கடந்த மே மாதம் முதலே ஊடுருவ முயற்சித்ததாகவும் அதற்கு இந்திய வீரார்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாகவும் அனுராக் மேலும் தெரிவித்துள்ளார்.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

குறிப்புச் சொற்கள்