சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய ஆடவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தபோது உயிரிழப்பு

சிங்கப்பூரிலிருந்து தமிழகம் திரும்பிய ஆடவர் ஒருவர் சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த வேளையில் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கொரோனா கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல் பரவியதை அடுத்து, அது உண்மையல்ல என அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடியைச் சேர்ந்த சுந்தரவேல் என்ற அந்த நபர் கடந்த ஜூன் 25ஆம் தேதி  சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பினார்.

இதையடுத்து சென்னையில் உள்ள நட்சத்திர தங்கு விடுதியில் அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார். எனினும் அவரது இறப்புக்குக் கிருமித் தொற்று காரணமல்ல என்றும் மாரடைப்பால்தான்  அவர் உயிரிழந்துள்ளார் என்றும் அதிகாரிகள் தெளிவுபடுத்தி உள்ளனர்.

இதற்கிடையே ஜெர்மனி, பஹ்ரைன், ஜப்பான், குவைத் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 10 பேருக்குக் கிருமித் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online