மாண்ட ராணுவ அதிகாரியின் மனைவி துணை ஆட்சியராக நியமனம்

மாண்ட ராணுவ அதிகாரியின் மனைவி துணை ஆட்சியராக நியமனம்

1 mins read
83a95267-8283-4895-ba1d-ed9e53b2a138
இதற்கான பணி ஆணையை திருவாட்டி சந்தோஷியை முதல்வர் சந்திர சேகர ராவ் நேற்று அவரிடம் வழங்கினார். படம்: ஊடகம் -

காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதியிலுள்ள கல்வான் பள்ளத்தாக்கில் அண்மையில் சீன ராணுவ வீரர்களுடன் இடம்பெற்ற மோதலில் மாண்ட கர்னல் சந்தோஷ் பாபுவின் மனைவி திருவாட்டி சந்தோஷி துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கான பணி ஆணையை முதல்வர் சந்திர சேகர ராவ் நேற்று அவரிடம் வழங்கினார்.

அத்துடன், செல்வந்தர்கள் பெருவாரியாக வசிக்கும் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் ஒரு நிலமனையும் அவருக்கு வழங்கப்பட்டது.

கடந்த மாதம் 15ஆம் தேதி இரவு நடந்த அம்மோதலில் 39 வயதான திரு சந்தோஷ் உட்பட இந்தியா ராணுவ வீரர்கள் 20 பேர் மாண்டனர்.

திரு சந்தோஷுக்கு எட்டு வயதில் ஒரு மகளும் நான்கு வயதில் ஒரு மகனும் உள்ளனர். முன்னதாக, திரு சந்தோஷின் குடும்பத்திற்கு ரூ.5 கோடி நிதியுதவியை தெலுங்கானா மாநில அரசு வழங்கியிருந்தது.

குறிப்புச் சொற்கள்