'சீனாவால் இந்திய ராணுவத்துக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்த முடியும்'

'சீனாவால் இந்திய ராணுவத்துக்குப் பெருத்த சேதத்தை ஏற்படுத்த முடியும்'

1 mins read
dc148bc8-fccf-40c1-a411-6b267318a91a
மேற்கு இமாலயப் பகுதியில் இருக்கும் எல்லைப்பகுதியில் இருக்கும் நிலப்பரப்பைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீன ராணுவம் முயன்றதாக இந்தியா நேற்று முன்தினம் தெரிவித்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

ஷாங்ஹாய்: இந்தியாவின் ராணுவத்துக்கு சீனாவால் முன்பைவிட பெருத்த சேதத்தை ஏற்படுத்த முடியும் என்று சீன அரசாங்கத்தின் ஆதரவுடன் வெளியிடப்படும் குளோபல் டைம்ஸ் நாளிதழ் நேற்று தெரிவித்தது.

இந்திய-சீன எல்லைப் பகுதியில் மீண்டும் இருதரப்பு ராணுவ வீரர்

களிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, அந்த நாளிதழ் இதைத் தெரிவித்தது. மேற்கு இமாலயப் பகுதியில் இருக்கும் எல்லைப்பகுதியில் இருக்கும் நிலப்பரப்பைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீன ராணுவம் முயன்றதாக இந்தியா நேற்று முன்தினம் தெரிவித்தது. சீன ராணுவத்தின் இந்த முயற்சியை தனது படையினர் முறியடித்ததாக அது கூறியது. இந்நிலையில், இந்தியப் படையினர் சீனாவின் எல்லையைத் தாண்டியதாக சீன ராணுவப் பேச்

சாளர் குற்றம் சாட்டினார். இந்தியா அதன் வீரர்களை அங்கிருந்து உடனடியாக மீட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

தனது ராணுவ வீரர்கள் இந்திய எல்லைக்குள் நுழையவில்லை என்று சீன வெளியுறவு அமைச்சு கூறியது. இந்தியாதான் பிரச்சினையைத் தொடங்கியது என்று குளோபல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.

சக்திவாய்ந்த சீனாவை இந்தியா எதிர்நோக்குவதாகவும் இந்த எல்லைத் தகராற்றில் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா ஆதரவுக்கரம் நீட்டும் என்ற மாயம் இந்தியாவுக்கு இருக்கக்கூடாது என்றும் அந்த நாளிதழ் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்