எல்லை மோதல்: இந்தியா, சீனா இடையே ரஷ்யா சமரச முயற்சி

கத்தி, கம்புகளுடன் சீன வீரர்கள்; இந்தியா மீண்டும் கடும் எச்சரிக்கை

புது­டெல்லி: இந்­தியா சீனா இடை­யே­யான எல்­லைப் பிரச்­சினை மோச­ம­டைந்­துள்ள நிலை­யில் இரு­த­ரப்­புக்­கும் இடையே நில­வும் பதற்­றத்­தைக் குறைக்க ரஷ்யா முயற்சி மேற்­கொண்­டுள்­ளது.

லடாக் பகு­தி­யில் சீனா அத்­து­மீறி வரு­வ­தாக இந்­தியா குற்­றம் சாட்டி உள்­ளது. பதி­லுக்கு சீனா­வும், ஒப்­பந்­தங்­களை மீறி இந்­தியா செயல்­ப­டு­வ­தாக சாடு­கிறது.

இந்­நி­லை­யில் சீனா, இந்­தியா என இரண்டு நாடு­க­ளு­ட­னும் நட்­பு­றவு பாராட்டி வரும் ரஷ்யா இரு­த­ரப்­புக்­கும் இடையே பேச்சு­வார்த்தை நடத்த முயன்று வரு­வ­தா­கத் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

ரஷ்ய தலை­ந­கர் மாஸ்­கோ­வில் சீன, இந்­திய வெளி­யு­றவு அமைச்­சர்­கள் சந்­தித்­துப் பேசிய பிறகு ரஷ்ய தரப்­பி­லி­ருந்து அடுத்­தக்­கட்ட நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­படும் எனத் தெரி­கிறது.

இந்­நி­லை­யில் இந்­தி­யா­வின் கோரிக்­கையை ஏற்று பாகிஸ்­தா­னுக்கு ஆயு­தங்­கள் தரப்­போ­வ­தில்லை என்று ரஷ்யா தெரி­வித்­துள்­ளது. எல்­லை­யில் பதற்­றம் அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில் ரஷ்­யா­வின் தலை­யீடு மிக முக்­கி­யத் திருப்­ப­மா­க­வும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­த­தா­க­வும் கரு­தப்­ப­டு­கிறது.

ஏற்கெனவே எல்லைப் பிரச்சினையில் இந்தியாவுக்கு உதவத் தயார் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது. ஆனால் நடப்புச் சூழலில் ரஷ்யாவின் உதவியைப் பயன்படுத்திக் கொள்வதே இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும் என இந்தியத் தரப்பு கருதுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே சீன ராணுவம் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. சீன வீரர்கள் துப்பாக்கிகளைத் தோளின் பின்பக்கம் தொங்கவிட்டு, கையில் கத்தி, கம்புகளை வைத்துள்ளது போன்ற படம் வெளியாகியுள்ளது.

அண்மையில் பாங்கோங் ஏரியின் தெற்குக் கரைப் பகுதியில் இந்தியா தனது நிலைகளை வலுப்படுத்தி உள்ளது. மேலும் சீன ராணுவம் அத்துமீறி நுழைய மேற்கொண்ட நடவடிக்கைகளையும் இந்திய வீரர்கள் முறியடித்துள்ளனர். இதனால் கடும் அதிருப்தி அடைந்துள்ள சீனத் தரப்பு தமது வீரர்களைக் குவித்துள்ளது.

இதற்கிடையே ஜம்முவில் உள்ள குல்காம் மாவட்டத்தில் காவல்துறையும் ராணுவமும் இணைந்து மேற்கொண்ட வாகனச் சோதனையின்போது சீனத் துப்பாக்கிகளுடன் இருவர் கைதாகினர்.

ஒரு லாரியை மடக்கிச் சோதனையிட்டபோது ஒரு ஏகே 47 ரக துப்பாக்கி, 6 சீனத் துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டன. அவற்றைப் பறிமுதல் செய்த பாதுகாப்புப் படையினர் லாரியில் வந்த இருவரை கைது செய்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!