இந்திய விமானப்படை தளபதி: சீனாவைவிட பலமாக உள்ளோம்

இந்­திய விமா­னப் படை­யின் திற­மைக்கு சீன விமா­னப்­படை ஈடு­கொ­டுக்க முடி­யாது என விமா­னப் படைத் தள­பதி ஆர்.கே.எஸ். பதா­ரியா தெரி­வித்­துள்­ளார்.

இந்­திய விமா­னப்­படை தினம் நாளை கொண்­டா­டப்­பட உள்­ளது. இதை­யொட்டி செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசிய தள­பதி பதாரியா, இரு­ மு­னைப் போருக்கு இந்­தியா தயா­ராக இருப்­ப­தா­கக் குறிப்­பிட்­டார்.

ரஃபேல் போர் விமா­னங்­களை இணைத்­துக் கொண்ட பின்­னர் விமா­னப்­ப­டை­யின் பலம் அதி­க­ரித்­துள்­ள­தா­கக் குறிப்­பிட்ட அவர், நாட்­டின் வடக்கு மற்­றும் மேற்கு எல்­லை­களில் இரு­மு­னைப் போரை எதிர்­கொள்ள விமா­னப்­படைத் தயார் என்­றார்.

கடந்த சில மாதங்­க­ளாக லடாக் எல்­லைப் பகு­தி­யில் இந்­திய, சீனத் துருப்­பு­க­ளுக்கு இடையே அவ்­வப்­போது மோதல் நிகழ்ந்து வரு­கிறது. இத­னால் பதற்­றம் நீடித்து வரும் நிலை­யில் தள­பதி பதா­ரியா இவ்­வாறு கூறி­யி­ருப்­பது முக்­கி­யத்­து­வம் பெற்­றுள்­ளது.

இந்­திய விமா­னப்­படை பல­மாக உள்­ளது என்­றா­லும், எதி­ரி­யைக் குறைத்து மதிப்­பி­டும் கேள்­விக்கே இட­மில்லை என்­றார் அவர்.

எத்­த­கைய அச்­சு­றுத்­த­லை­யும் சமா­ளிக்க விமா­னப்­படை தயார் நிலை­யில் உள்­ள­தா­க­வும் லடாக்­கில் தேவைப்­படும் அனைத்து இடங்­க­ளி­லும் துருப்­புக்­கள் நிலை­நி­றுத்­தப்பட்­டுள்­ள­தா­க­வும் குறிப்­பிட்ட தள­பதி பதா­ரியா, ரஃபேல் விமானங்கள் இணைப்பால் இந்­திய விமா­னப்­படை சீனாவை விட ஒரு படி விஞ்சி நிற்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!