குஜராத் கொவிட்-19 மருத்துவமனையில் தீ; 5 நோயாளிகள் மரணம்

குஜராத் கொவிட்-19 மருத்துவமனையில் தீ; 5 நோயாளிகள் மரணம்

1 mins read
5f42387b-59db-458f-9315-adada721f558
படம்: இந்திய ஊடகம் -

குஜராத்தின் ராஜ்கோட் நகரில் கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் உதய் சிவானந்த் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை சுமார் 1 மணியளவில் தீப்பற்றியதில் ஐந்து நோயாளிகள் உயிரிழந்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த வேறு 28 கொவிட்-19 நோயாளிகள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தின் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு மாநில முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

தீச்சம்பவம் குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் 30 பேரை மீட்டனர்; அவர்களில் இருவர் பின்னர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. வேறு 3 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே தீயில் கருகி மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட நோயாளிகள் மற்ற கொவிட்-19 மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

குறிப்புச் சொற்கள்