டெல்லியில் அமைதியாகப் போராட விவசாயிகளுக்கு அனுமதி

2 mins read
55923f3d-20a2-4384-ace0-0cf6c9d829c8
தடுப்புகளை அகற்றிவிட்டு முன்னேற முயலும் விவசாயிகளை அமைதிப்படுத்தும் போலிசார். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்­திய அர­சின் புதிய வேளாண் சட்­டங்­களை எதிர்த்து டெல்­லி­யில் அமை­தி­வ­ழி­யில் போராட்­டம் நடத்த விவ­சா­யி­க­ளுக்கு நேற்று அனு­மதி வழங்­கப்­பட்­டது.

இந்­திய அரசு அண்­மை­யில் நிறை­வேற்­றிய மூன்று மசோ­தாக்­க­ளைத் திரும்­பப் பெறக் கோரி வட­மா­நில விவ­சா­யி­கள், குறிப்­பாக பஞ்­சாப் மாநில விவ­சா­யி­கள் கடந்த இரு மாதங்­க­ளா­கப் போராட்­டம் நடத்தி வந்­த­னர்.

ஆயி­னும், மத்­திய அரசு தங்­கள் கோரிக்­கை­க­ளுக்­குச் செவி­சாய்க்­காத நிலை­யில் 'டெல்லி செல்­வோம்' போராட்­டத்­திற்குப் பஞ்­சாப், அரி­யானா மாநில விவ­சா­யி­கள் அழைப்பு விடுத்­த­னர். இதையடுத்து, நேற்று முன்­தி­னத்­தில் இருந்து விவ­சா­யி­கள் டெல்­லியை நோக்­கிப் படை­யெ­டுத்­த­னர்.

இதைத் தொடர்ந்து, டெல்­லிக்­குள் அவர்­களை நுழை­ய­வி­டா­மல் தடுக்க மாநில எல்­லைப் பகு­தி­கள் தடுப்­பு­கள் அமைக்­கப்­பட்டு, போலி­சார் குவிக்­கப்­பட்­ட­னர். அதை­யெல்­லாம் மீறி டெல்­லிக்­குள் செல்ல விவ­சா­யி­கள் முயல, கண்­ணீர்ப் புகைக் குண்­டு­களை வீசி­யும் தண்­ணீ­ரைப் பீய்ச்­சி­ய­டித்­தும் தடி­யடி நடத்­தி­யும் போலி­சார் அவர்­க­ளைக் கலைக்க முயன்­ற­னர். இதற்கு, டெல்­லியை ஆளும் ஆம் ஆத்மி உட்­பட எதிர்க்­கட்­சி­கள் அனைத்­தும் கண்­ட­னம் தெரி­வித்­தன.

இந்­நி­லை­யில், நேற்று 2ஆம் நாளாக விவ­சா­யி­கள் தேவை­யான உண­வுப்­பொ­ருள்­க­ளு­டன் டெல்­லி நோக்­கி விரைந்தனர். ஒரு­வ­ழி­யாக, டெல்­லி­யின் புராரியில் உள்ள நிரங்­காரி திட­லில் விவ­சா­யி­கள் கூடி, அமை­தி­யா­கப் போராட்­டம் நடத்த அனு­மதி வழங்­கப்­பட்­டது.

முன்­ன­தாக, டெல்­லி­யில் உள்ள ஒன்­பது திடல்­க­ளைத் தற்­கா­லி­கச் சிறைச்­சா­லை­க­ளாக மாற்ற டெல்லி அர­சி­டம் போலிஸ் அனு­மதி கோரி­யது. ஆனால், போராட்­டம் நடத்த விவ­சா­யி­களுக்கு உரி­மை­யுண்டு எனக் கூறி, முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அதனை ஏற்க மறுத்துவிட்டது.

குறிப்புச் சொற்கள்