மருத்துவமனையில் தெருநாய்: பதைபதைக்கச் செய்த காணொளி

உத்­த­ரப் பிர­தேச மாநி­லம் சம்­பல் மாவட்­டத்­தில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­யில் ஒரு சிறு­மி­யின் சட­லத்­தைத் தெரு நாய் கடிப்­ப­தைக் காட்­டும் காணொளி பெரும் சர்ச்­சை­யைக் கிளப்பி உள்­ளது.

மருத்­து­வ­ம­னை­யின் ஒதுக்­கப்­பட்ட பகு­தி­யில் வைக்­கப்­பட்­டி­ருந்த தூக்­குப் படுக்­கை­யில் நேற்று முன்தினம் வெள்­ளைத் துணி­யில் மூடப்­பட்ட சட­லத்தை தெரு­நாய் கடிப்­பது அந்த 20 விநாடி காணொ­ளி­யில் பதி­வா­னது. சாலை விபத்­தில் சிறுமி ஒரு­வர் உயி­ரி­ழந்­த­தாக முதல்­கட்­டத் தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லும் வழி­யில் சிறுமி உயி­ரி­ழந்­தாரா அல்­லது மருத்­து­வ­ம­னை­யில் உயிர்­பி­ரிந்­ததா என்று கூறப்­ப­ட­வில்லை.

சிறு­மி­யின் தந்தை சரண் சிங், “ஒன்­றரை மணி நேர­மாக எனது மக­ளின் உடல் கண்­டு­கொள்­ளப்­ப­ட­வில்லை. இதற்கு மருத்­து­வ­ம­னை­யின் அலட்­சி­யமே கார­ணம்,” என்று கண்­ணீர்­மல்க தெரி­வித்­தார். மருத்­து­வ­ம­னை­யில் தெரு­நாய்­கள் தொல்லை இருப்­பதை மருத்­து­வ­மனை நிர்­வா­கம் ஒப்­புக்­கொண்­டுள்­ளது.

இது­கு­றித்து ஏஎன்ஐ செய்தி நிறு­வ­னத்­தி­டம் மருத்­து­வர் சுஷில் வர்மா கூறு­கை­யில், “வழக்­க­மான நடை­மு­றை­க­ளுக்­குப் பிறகு உடல் குடும்­பத்­தி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அவர்­கள் பிரேதப் பரி­சோ­தனை செய்­ய­வேண்­டாம் என்று தெரி­வித்து­ விட்­டார்­கள். சட­லத்­தின் அருகே யாரும் இல்­லா­த­போது இந்­தச் சம்­ப­வம் நடை­பெற்­ற­தாக தெரி­கிறது,” என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!