புது அணை கட்டும் சீனா: இந்தியா அதிர்ச்சி

புது அணை கட்டும் சீனா: இந்தியா அதிர்ச்சி

1 mins read
430ffa20-cfed-4909-ab93-e81dce1e0812
செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய சீனா­வின் எரி­சக்தி கட்­டு­மான வாரி­யத்­தின் தலை­வர் யான் ஜியோங், பிரம்­ம­புத்­திரா ஆற்­றின் கீழ்ப்­ப­கு­தி­யில் புதிய நீர் மின்­சக்­தித் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்த இருப்­ப­தா­கக் கூறி­னார். மாதிரி படம்: இந்திய ஊடகம் -

பிரம்­ம­புத்­திரா நதி­யின் குறுக்கே பிரம்­மாண்ட அணை­யைக் கட்ட சீனா திட்­ட­மி­டு­வ­தாக வெளி­யான தக­வல் இந்­தி­யத் தரப்­புக்கு அதிர்ச்சி அளித்­துள்­ள­தாக சீன ஊட­கங்­களில் செய்தி வெளி­யாகி உள்­ளது.

பிரம்­மாண்ட அணை­யைக் கட்­டும் திட்­டத்தை சீனா அடுத்­தாண்டு முதல் செயல்­ப­டுத்த இருப்­ப­தா­க­வும் இது­கு­றித்து அந்­நாட்­டின் 14வது ஐந்­தாண்­டுத் திட்­டத்­தில் மிக விரி­வான தக­வல்­கள் இடம்­பெற்­றி­ருப்­ப­தா­க­வும் அந்த ஊட­கச் செய்தி தெரி­விக்­கிறது.

சீனா பெரிய அணை­யைக் கட்­டும் பட்­சத்­தில் பிரம்­ம­புத்­திரா நதி பாயும் நாடு­க­ளான இந்­தியா, பங்­ளா­தேஷ் ஆகி­ய­வற்­றுக்­குச் செல்­லும் நீரை அந்­நாடு தடுத்து நிறுத்த முடி­யும். இத­னால் இந்­தி­யா­வுக்கு பாதிப்பு ஏற்­ப­டக்கூடும்.

இது­கு­றித்து செய்­தி­யா­ளர்­களிடம் பேசிய சீனா­வின் எரி­சக்தி கட்­டு­மான வாரி­யத்­தின் தலை­வர் யான் ஜியோங், பிரம்­ம­புத்­திரா ஆற்­றின் கீழ்ப்­ப­கு­தி­யில் புதிய நீர் மின்­சக்­தித் திட்­டத்­தைச் செயல்­ப­டுத்த இருப்­ப­தா­கக் கூறி­னார்.

மேலும், சீனா­வின் நீர்­வ­ளம் மற்­றும் உள்­நாட்­டுப் பாது­காப்­பைப் பரா­ம­ரிக்­கும் வகை­யில் இந்த அணைத் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட உள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே பிரம்­ம­புத்­திரா நதி­யின் குறுக்கே அணை கட்டும் சீனா­வின் திட்­டத்­துக்கு இந்­தி­யா­வும் பங்­ளா­தே­ஷும் எதிர்ப்­புத் தெரி­விப்பதாக கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்