விவசாயிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

விவசாயிகளுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

1 mins read
425bddf3-78f6-43a1-9f4a-6ed3061960f2
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் வால்மிகி சமாஜ் அமைப்பினர் நேற்று முன்தினம் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலிசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.படம்: ஏஎஃப்பி -
multi-img1 of 2

புதிய வேளாண் சட்­டங்­களை எதிர்த்து விவ­சா­யி­கள் நடத்­தும் போராட்­டம் நீடித்து வரு­கிறது. முன்­ன­தாக மத்­திய அர­சுக்­கும் விவ­சா­யி­க­ளுக்­கும் இடையே நடந்த பேச்­சு­வார்த்தை தோல்­வி­யில் முடிந்­தது.

இன்று மீண்­டும் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­படும் என மத்­திய அரசு அறி­வித்­துள்ள நிலை­யில், நேற்­றும் டெல்­லி­யின் எல்­லைப் பகு­தி­களை முடக்­கும் வகை­யில் விவ­சா­யி­கள் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.

ஏழா­வது நாளான நேற்று டெல்லி புற­ந­கர்ப்­ப­கு­தி­யான புரா­ரி­யில் சந்த் நிரங்­கரி சம­கம் பகு­தி­யில் போராட்­டம் நடை­பெற்­றது.

உத்­த­ரப்­பி­ர­தேச, ராஜஸ்­தான் மாநில விவ­சா­யி­களும் நேற்று போராட்­டக் களத்­தில் அதிக எண்ணிக்கையில் இணைந்­த­னர்.

விவ­சா­யி­கள் இரண்டு மாதங்­க­ளுக்­குத் தேவை­யான உண­வுப் பொருட்­க­ளு­டன் குவிந்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­படும் நிலை­யில், 3 சட்­டங்­க­ளை­யும் திரும்­பப்­பெற வேண்­டும் என்ற கோரிக்­கையை மட்­டுமே வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர். புதிய வேளாண் சட்­டங்­களில் உள்ள குறிப்­பிட்ட பிரச்­சி­னை­களை கண்­ட­றிந்து அர­சி­டம் தெரி­விக்கும் படி விவ­சாய சங்­கங்­க­ளிடம் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக மத்­திய அரசு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

குறிப்புச் சொற்கள்