சீன தயாரிப்புகளை வைத்து இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்

சீனா தயா­ரித்­துள்ள ஆளில்லா உளவு விமா­னங்­க­ளைப் பயன்­ப­டுத்தி பாகிஸ்­தான் இந்­தி­யாவை உளவு பார்ப்­ப­தாக சந்­தே­கம் எழுந்­துள்­ளது.

இது­தொ­டர்­பாக உளவு அமைப்­பு­கள் மத்­திய அரசை எச்­ச­ரித்­துள்­ளன.

அண்­மை­யில் காஷ்­மீ­ரின் ஆர்­னியா பகு­தி­யில் உள்ள அனைத்­து­லக எல்­லைக் கட்­டுப்­பாட்டு கோட்­டின் வழி பாகிஸ்­தா­னின் ஆளில்லா சிறிய ரக உளவு விமா­னம் ஊடு­ரு­வி­யது.

இதை­ய­டுத்து பாது­காப்­புப் படை­யி­னர் அதை நோக்கி துப்­பாக்­கி­யால் சுட்­ட­தால் அந்த விமா­னம் திரும்­பிச் சென்­றது. தற்­போது எல்­லை­யில் பாது­காப்­பும் கண்­கா­ணிப்­பும் அதி­க­ரித்­துள்­ளது.

இந்­நி­லை­யில் அந்த உளவு விமா­னம் சீனத் தயா­ரிப்பு என்­றும் காஷ்­மீ­ரில் சதி வேலை­களை அரங்­கேற்ற பாகிஸ்­தா­னின் ஐஎஸ்ஐ அமைப்பு இதைப் பயன்­ப­டுத்­து­கிறது என்­றும் உள­வுத்­துறை தெரி­வித்­துள்­ளது.

அடுத்த இரு மாதங்­க­ளுக்கு பனிப்­பொ­ழிவு அதி­க­மாக இருக்­கும் என்­றும் பயங்­க­ர­வா­தி­களும் பாகிஸ்­தான் உளவு அமைப்­பும் ஜம்மு காஷ்­மீர், பஞ்­சாப் உள்­ளிட்ட பகு­தி­களில் ஆளில்லா உளவு விமா­னங்­களை அதி­க­ள­வில் பயன்­ப­டுத்த வாய்ப்­புள்­ளது என்­றும் மத்­திய அரசை உள­வுத்­துறை உஷார்­ப­டுத்தி உள்­ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்­தில் மட்­டும் சீனா­வில் தயா­ரிக்­கப்­பட்ட 4 ஆயு­தங்­க­ளு­டன் கூடிய ஆளில்லா விமா­னங்­கள் பஞ்­சா­பில் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன.

எனவே ஊடு­ரு­வல் அதி­கம் உள்ள பகு­தி­களில் பாது­காப்­புப் படை­யி­னர் தீவிர கண்­கா­ணிப்­புப் பணி­யில் ஈடு­பட்­டுள்­ள­தாக இந்­திய ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!