ஜெய்சங்கர்: இந்திய, சீன உறவு சுமுகமாக இல்லை

இந்­தியா-சீனா இடை­யே­யான உறவு நடப்­பாண்­டில் பெரி­தும் சீர்­கு­லைந்­துள்­ள­தாக மத்­திய வெளி­யு­றவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் தெரி­வித்­துள்­ளார்.

கடந்த 40 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு இரு தரப்­புக்­கும் இடை­யே­யான உறவு கடி­ன­மான கால­கட்­டத்­தில் இருப்­ப­தா­க­வும் இணைய வழி­யி­லான கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்சி ஒன்­றில் பேசி­ய­போது அவர் குறிப்­பிட்­டார்.

எல்­லைக் கட்­டுப்­பாட்­டுக் கோட்­டுப் பகு­தி­யில் அமை­தி­யைப் பரா­ம­ரிப்­ப­து­தான் மற்ற துறை­களில் இரு­த­ரப்பு உறவு வளர்­வ­தற்கு அடிப்­ப­டை­யாக இருக்­கும் என்று குறிப்­பிட்ட அவர், இது­தான் இந்­தி­யா­வின் நிலைப்­பாடு என்­றார்.

எல்­லை­யில் தற்­போ­துள்ள நிலைமை நீடிப்­பதை அனு­ம­திக்க இய­லாது என்­றும் பல ஆண்­டு­க­ளாக சீனா­வு­ட­னான உற­வில் பிரச்­சி­னை­கள் நீடித்த போதி­லும் வர்த்­த­கம், சுற்­றுலா உள்­ளிட்ட துறை­களில் உறவு வளர்ந்து வந்­த­தா­க­வும் அவர் சுட்­டிக் காட்­டி­னார்.

எல்­லை­யில் அமை­தி­யைப் பரா­ம­ரிக்க சில ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தி­டப்­பட்­ட­தாக நினைவு கூர்ந்த அவர், எல்­லை­யில் படை­க­ளைக் குவிக்­கக்­கூ­டாது என கடந்த 1993ஆம் ஆண்­டில் இருந்தே ஒப்­பந்­தங்­கள் செய்­து­கொள்­ளப்­பட்டு வந்­த­தா­கத் தெரி­வித்­தார்.

இந்த ஒப்­பந்­தங்­களை மீறி பல்­லா­யி­ரக்­க­ணக்­கான துருப்­பு­களை லடாக் எல்­லைக் கோட்­டுப் பகு­தி­யில் சீனா குவித்­துள்­ள­தா­கச் சாடிய அவர், இது­தொ­டர்­பாக சீனத்­த­ரப்பு ஐந்து முரண்­பட்ட விளக்­கங்­களை அளித்­தி­ருப்­ப­தா­கக் கூறி­னார்.

“சீனா­வின் செயல்­பாடு ஒப்­பந்­தங்­களை மீறி­யுள்­ளது. இத­னால்­தான் இரு­த­ரப்பு உறவு இயல்­பா­கவே பாதிக்­கப்­பட்­டுள்­ளது. கல்­வான் பள்­ளத்­தாக்­கு மோத­லில் 20 இந்­திய வீரர்­கள் பலி­யா­கி­னர். இது நமது தேசிய மன­நி­லையை முற்­றி­லும் மாற்­றி­விட்­டது,” என்றார் ஜெய்சங்கர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!