தளபதியை மாற்றிய சீன அதிபர்: லடாக் எல்லைப் பகுதியில் பதற்றம் குறைய வாய்ப்பு

லடாக் எல்­லைப் பகு­தி­யில் நில­வும் பதற்­றத்­துக்கு மத்­தி­யில் இந்­திய எல்­லைக்கு என புதிய ராணு­வத் தள­ப­தியை நிய­மித்­துள்­ளது சீனா.

இதை­ய­டுத்து இரு­த­ரப்­புக்­கும் இடை­யே­யான பதற்­றம் மெல்ல தணி­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

லடாக் மோதல் நிகழ்ந்­த­போது ஜென­ரல் ஸாவோ ஜாங்கி சீனப் படைக்­குத் தலைமை ஏற்­றி­ருந்­தார். அவ­ரது கண்­கா­ணிப்­பில்­தான் கிழக்கு லடாக் எல்­லைப் பகு­தி­யில் ராணு­வப் பயிற்சி மேற்­கொள்ள ஆயி­ரக்­க­ணக்­கான வீரர்­கள் குவிக்­கப்­பட்­ட­னர். இதை­ய­டுத்து இந்­தி­யா­வும் எல்­லை­யில் துருப்­புக்­க­ளைக் குவித்­த­தால் பதற்­றம் ஏற்­பட்­டது.

கடந்த 2017ஆம் ஆண்டு டோக்­லாம் பகு­தி­யில் சீனத்­து­ருப்­புக்­கள் அத்­து­மீ­றி­ய­தும் ஸாவோ ஜாங்­கி­யின் கண்­கா­ணிப்­பின் பேரி­லேயே நிகழ்ந்­தது.

இவர் இந்­தி­யா­வுக்­கும் பூட்டா­னுக்­கும் எதி­ரான நிலைப்­பாட்­டைக் கொண்­ட­வ­ரா­கக் கரு­தப்­ப­டு­கிறது. எனவே இவர் தள­பதி பொறுப்­பில் இருந்து விலக்­கப்­பட்­டது முக்­கி­யத்­து­வம் பெறு­கிறது.

கடந்த மே மாதத்­தி­லி­ருந்து நீடித்­து­வ­ரும் பதற்­றத்­தைத் தணிக்க தூத­ரக அள­வி­லும் ராணுவ மட்­டத்­தி­லும் தொடர் பேச்­சு­வார்த்­தை­கள் நடை­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லை­யில் இந்­திய எல்­லைப் பகு­திக்­கான தள­ப­தி­யாக இருந்த ஸாவோ ஜாங்­கியை அப்­பொ­றுப்­பில் இருந்து விடு­வித்து, ஜென­ரல் ஸாங் ஷுடோங்கை நிய­மித்­துள்­ளார் சீன அதி­பர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!