புதுடெல்லி: புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இளையர் காங்கிரஸ் சார்பில் நேற்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது அத்தியாவசியப் பொருள்களின் விலையும் வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்து விட்டதாக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போலிசார் அவர்களை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

