ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க சீனா முட்டுக்கட்டை

‘ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் தரும் விவகாரத்தில், எங்களுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. அதே நேரத்தில் மன்றத்தைச் சீரமைக்க அனைவரும் ஏற்கும் திட்டம் தேவை’ என, சீனா கூறியுள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு மன்றத்தில் சீனா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இந்தாண்டு ஜனவரியில், இந்தியா தற்காலிக உறுப்பினரானது. வரும் ஆகஸ்டில், அது தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ளது.

இதற்கிடையே, கவுன்சிலின் நிரந்தர உறுப்பினராவதற்காக இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

மற்ற நான்கு நாடுகள் ஆதரவு தெரிவித்தாலும், சீனா அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

இந்நிலையில், பாதுகாப்பு கவுன்சில் தொடர்பாக, இந்தியா - சீனா இடையே, இன்று, ‘மெய்நிகர்’ முறையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இது குறித்து, சீன வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர், வாங்க் வென்பின், "பயங்கரவாதத்தை ஒடுக்குவது, அமைதிப் படை நடவடிக்கைகள், பல நாடுகள் இடையேயான ஒத்துழைப்பு என, பல பிரச்சினைகள் குறித்து, இரு தரப்பும் ஆலோசனை நடத்தின.

"பாதுகாப்பு மன்றத்தின் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை சேர்க்கும் விவகாரத்தில், சீனாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. மன்றத்தில் சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும், அதன் அதிகாரம் மற்றும் செயல்பாடு மேம்பட வேண்டும், முடிவெடுக்கும் விஷயத்தில், அதிக நாடுகளுக்கு அதிகாரம் வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடு.

ஆனால், இது அனைத்துத் தரப்பினரும் ஏற்கக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்கு விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்," என அவர் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!