கறுப்பு பூஞ்சை; 150 பேர் பாதிப்பு

கறுப்பு பூஞ்சை; 150 பேர் பாதிப்பு

2 mins read
a3a4ec0b-7cad-4af8-a748-c83399b8cf26
ஹைதராபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளிகளை மருத்துவர் ஒருவர் கவனிக்கிறார். கிருமித் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் தற்போது கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.படம்: ஏஎஃப்பி -

கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நோயாளிகள் வீட்டிலும் முகக்கவசம் அணிவது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஹைத­ரா­பாத்: ஹைத­ரா­பாத்­தில் கடந்த மூன்று நாட்­க­ளாக கறுப்பு பூஞ்­சை­யால் பாதிக்­கப்­பட்ட 150க்கும் மேற்­பட்ட நோயா­ளி­கள் அரசு இஎன்டி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

இவர்­கள் அனை­வ­ரும் தெலுங்­கா­னா­வின் பல்­வேறு மாவட்­டங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என்று டெக்­கான் குரோ­னிக்­கல் தெரி­வித்­தது.

ஐம்­பது படுக்­கை­கள் மட்­டுமே காலி­யாக இருப்­ப­தாக தெரி­வித்த மருத்­து­வர்­கள், கறுப்பு பூஞ்­சை­யால் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­க­ளால் மருத்­து­வ­மனை நிரம்­பி­விட்­டது என்றனர்.

"கறுப்பு பூஞ்சையால் மூக்கு மற்றும் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிக்சை அளிக்கப்படுகிறது.

"சைனஸ் போன்ற மிதமான பாதிப்பு உள்ளவர்களுக்கு வெளி நோயாளியாக சிகிச்சை அளிக்கப் படுகிறது," என்றும் அவர்கள் தெரி வித்தனர்.

இந்த நிலையில் கிருமித்தொற்று பரிசோதனைக்காக வெளிநோயாளி சிகிச்சைப் பிரிவுக்கு பலர் படை யெடுப்பதால் அங்கும் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மக்களிடையே அச்சம் ஏற்பட்டு உள்ளதால் அனைவரும் பரி சோதனைக்கு ஓடி வருகின்றனர் என்று மருத்துவர் ஒருவர் கூறினார்.

இதற்­கி­டையே கேரளா மாநி­லத்­தில் கறுப்பு பூஞ்சை நோய் கார­ண­மாக இளம் பெண் ஒரு­வர் உயி­ரி­ழந்­துள்­ளார்.

கொரோனா தொற்­றின் 2வது அலை கார­ண­மாக நாடு முழு­வ­தும் தீவிர பாதிப்­பு­கள் ஏற்­பட்டு வரும் நிலை­யில் தற்­போது கறுப்பு பூஞ்சை என்ற நோய் பரவி வரு­கிறது.

வட­மா­நி­லங்­களில் இந்த நோய்த்­தொற்று பரவி வருவதால் அனைத்து மாநி­லங்­களும் கறுப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறி­வித்து உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என மத்­திய சுகா­தா­ர அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இந்த நிலை­யில் திரு­வ­னந்­த ­பு­ரம் மருத்­து­வக் கல்­லூ­ரி­யில் சிகிச்சை பெற்று வந்த 32 வயது பெண் கறுப்பு பூஞ்­சைக்­குப் பலி­யா­கி­யுள்­ளார்.

கேர­ளா­வில் மட்­டும் இது­வரை 15 பேருக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

இதே மாநி­லத்­தில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதித்­த­வ­ரின் கண் ஒன்று அறுவை சிகிச்சை மூலம் அகற்­றப்­பட்­டுள்­ளது.

டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப் பட்ட 197 பேர் சிகிச்சைப் பெற்று வருவதாக டெல்லி சுகாதார அமைச்சர் சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் சிலர் கறுப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இதற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் 'ஆம்போடெரிசின் பி' மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 5,000 'ஆம்போடெரிசின் பி' மருந்துகளை தருவிக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து உள்ளது.