குஜராத்தில் கனமழை: ஊருக்குள் வெள்ளம் புகுந்தது; மக்கள் தவிப்பு

அக­ம­தா­பாத்: குஜ­ராத் மாநி­லத்­தில் பெய்து வரும் கன­ம­ழை­யால் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அங்­குள்ள முக்­கிய ஆறு­களில் வெள்­ளம் பெருக்­கெ­டுத்து ஓடு­கிறது. ராஜ்­கோட், ஜாம்னா நகர் மாவட்­டங்­களில் உள்ள தாழ்­வான பகு­தி­களை வெள்­ள­நீர் சூழ்ந்­துள்­ளது.

பல அடி உய­ரத்­துக்கு வெள்ள நீர் தேங்கி இருப்­ப­தா­லும் இடை­விடா­மல் மழை நீடித்து வரு­வ­தா­லும் பொது­மக்­கள் உயி­ருக்கு அஞ்சி வீட்­டின் மாடி­களில் தங்கி உள்­ள­னர்.

இவர்­க­ளுக்­குத் தேவை­யான உணவு உள்­ளிட்ட அத்­தி­யா­வ­சிய பொருள்­களை தேசிய, மாநில பேரி­டர் மீட்­புக்­கு­ழு­வி­னர் விநி­யோ­கித்து வரு­கின்­ற­னர்.

மேலும், மீட்­புப் பணி­களும் முழு வீச்­சில் நடை­பெற்று வரு­கின்­றன. விமா­னப் படை ஹெலி­காப்­டர்­களும் மீட்­புப்­ப­ணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலை­யில், இது­வரை ஆயி­ரக்­கணக்­கா­னோர் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக அரசுத் தரப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ராஜ்­கோட் மாவட்­டத்­தில் மட்­டும் திங்­கட்­கி­ழமை ஒரே நாளில் 43 சென்­டி­மீட்­டர் அள­வுக்கு மழை பெய்­துள்­ளது.

இந்­நி­லை­யில், ஆறு­களில் திடீர் வெள்­ளப்­பெ­ருக்கு ஏற்­பட்டு பல ஊர்­களில் வெள்ள நீர் புகுந்­தது. இத­னால் ஏரா­ள­மான வாக­னங்­கள் அடித்­துச் செல்­லப்­பட்­டன.

அப்­போது ஒரு காரில் இருந்த பெண்­ணும் இரண்டு ஆட­வர்­களும் வெள்­ளத்­தில் மூழ்கி பரி­தா­ப­மாக இறந்­த­னர்.

இதற்­கி­டையே, நாடு முழு­வ­தும் மழை, வெள்­ளம் கார­ண­மாக கடந்த மூன்று ஆண்­டு­களில் மட்­டும் 6,800க்கும் அதி­க­மா­னோர் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர் என்று மத்­திய அரசு தெரி­வித்­துள்­ளது.

மிக அதிகபட்சமாக மேற்­கு­ வங்கத்­தில் 964 பேர் பலி­யா­கி­விட்­ட­தாக தெரிய வந்­துள்­ளது.

மத்­தி­யப் பிர­தே­சம் 917 பேரு­டன் இரண்­டாம் இடத்­தில் உள்­ளது. கேரளா­வில் 708 பேர் வெள்­ளத்­துக்கு பலி­யா­கி­விட்­ட­தாக தர­வு­கள் தெரி­விக்­கின்­றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!