இந்தியா வரும் பயணிகளுக்கு கொவிட்-19 கண்டறியப்பட்டால் தனிமைப்படுத்துதல் கட்டாயம் அல்ல

இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகளிடம் கொவிட்-19 நோய்த்தொற்று கண்டறியப்பட்டால், அவர்களைத் தனி மையங்களில் தங்கவைப்பது கட்டாயமில்லை என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி, தொற்று அபாயமுள்ள நாடுகள் உள்ளிட்ட எந்தவொரு நாட்டில் இருந்தும் இந்தியாவிற்கு வரும் பயணிகள், கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால், வகுக்கப்பட்ட நிலையான நெறிமுறையின்படி அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். மாறாக, கட்டாயமாக தனிமைப்படுத்தும் நடவடிக்கைக்கு அவர்கள் உட்படுத்தப்பட மாட்டார்கள்.

இதர விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் இன்று சனிக்கிழமைமுதல் நடப்புக்கு வருகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!