முத்த வழக்கு; ஷில்பா ஷெட்டி தவறு செய்யவில்லை

முத்த வழக்கு; ஷில்பா ஷெட்டி தவறு செய்யவில்லை

1 mins read
ebef1bda-da6a-4df1-bcf5-d1cd955b89ef
2007ல் பொது மேடை­யில் நடிகை ஷில்பா ஷெட்­டியை அமெ­ரிக்க நடி­கர் ரிச்­சர்ட் கீர் கட்­டி­ய­ணைத்து முத்­த­மிட்­டது பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது. கோப்­புப் படம்: ஏபிசி.காம் -

புது­டெல்லி: கடந்த 2007ல் ராஜஸ்­தா­னில் நடந்த எய்ட்ஸ் விழிப் புணர்வு நிகழ்ச்­சி­யில் நடிகை ஷில்பா ஷெட்­டியை ஹாலி­வுட் பிர­பல அமெ­ரிக்க நடி­க­ரான ரிச்­சர்ட் கீர் பொது­மே­டை­யில் கட்டி யணைத்து முத்­தம் கொடுத்­தார். இந்த முத்­தக்­காட்­சி­கள் அப்­போது ஊட­கங்­களில் வெளி­யாகி பெரும் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

இதை­ய­டுத்து பொது இடத்­தில் ஆபா­ச­மாக நடந்­து­கொண்­ட­தாக நடிகை ஷில்பா ஷெட்டி மீது இந்­திய சட்­டப்­பி­ரி­வு­கள் 292, 293 மற்றும் 294 ஆகி­ய­வற்­றின் கீழ் வழக்­குத் தொட­ரப்­பட்­டது.

இந்த வழக்கை ஷில்பா ஷெட்டி மும்பை மாஜிஸ்­தி­ரேட் நீதி­மன்­றத்­துக்கு மாற்­றி­யி­ருந்­தார். தனது மனு­வில் ஹாலி­வுட் நடி­கர் முத்­த­மிட்­ட­போது தான் தடுக்­க­வில்லை என்­று­தான் தன் மீது வழக்­குத் தொடுக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் வழக்­குத்­தொ­டுக்­கப்­பட்ட சட்­டப் ­பி­ரி­வு­க­ளின்­கீழ் தான் எந்த குற்­ற­மும் செய்­ய­வில்லை என்று குறிப்­பிட்­டி­ருந்­தார்.

இந்த வழக்கு நேற்று விசா­ர­ணைக்கு வந்­தது. புகா­ரில் கூறப்­பட்ட குற்­றங்­களில் ஒன்­று­கூட திருப்­தி அ­ளிக்­க­வில்லை என்று கூறிய மாஜிஸ்­தி­ரேட் நீதி­மன்­றம், ஷில்பா ஷெட்டி எந்­தக் குற்­ற­மும் செய்­ய­வில்லை என்று தெரி­வித்­தது. இதை­ய­டுத்து 15 ஆண்­டு வழக்கு முடி­வுக்கு வந்­துள்­ளது.