போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு பள்ளிக்கல்வி மற்றும் பட்டப்படிப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
இதனால் அங்குள்ள சிறைக் கைதிகள் பலரும் கல்வி பயில முன்வந்துள்ளனர். இந்த ஆண்டு 253 பேர் தேர்வு எழுதுகின்றனர். 2019ஆம் ஆண்டில் 60க்கு மேற்பட்டவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.
சிறை கண்காணிப்பாளர் அல்கா சோன்கர், தற்போது சிறையில் பள்ளிக் கல்வி, பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் இதற்காக சிறைத் துறை ஆசிரியர்களை நியமித்துள்ளதாகவும் கூறினார்.

