கடந்த சனிக்கிழமையன்று ஒரு கார் விபத்தில் உயிரிழந்த கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் உருவத்தை மணல் சிற்பமாக வடித்து அஞ்சலி செலுத்தியுள்ளார் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.
ஒடிசாவின் பூரி கடற்கரையில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டு உள்ளது. இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள சுதர்சன் பட்நாயக், "ஆண்ட்ரூ காலமானதை அறிந்து வருந்துகிறேன். இது கிரிக்கெட் உலகிற்கு மிகப்பெரிய இழப்பு," என பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். படங்கள்: சுதர்சன் பட்நாயக்/ டுவிட்டர்

