இந்தியச் சிறுவன் உலகின் ஆக இளைய தொடர் கொலைகாரன்

இந்தியச் சிறுவன் உலகின் ஆக இளைய தொடர் கொலைகாரன்

1 mins read
53f6041d-f522-4662-869a-f6de6b19ed23
படம்: இந்திய ஊடகம் -

இந்தியாவைச் சேர்ந்த ஒரு எட்டு வயது சிறுவன் உலகின் ஆக இளைய தொடர் கொலைகாரன் என நம்பப்படுகிறது.

பீகாரைச் சேர்ந்த அமர்ஜித் சாடா என்பவன் 1998ல் பிறந்தான். அவன் தன்னுடைய முதல் கொலையை தனது ஏழாவது வயதில் செய்தான். அவன் எட்டு வயது அடையும் முன்னரே, மூன்று கொலைகளை புரிந்துள்ளான்.

2006ல் தன்னுடைய ஆறு வயது உறவினரை அவன் முதலில் கொன்றான். தன்னுடைய சொந்த தங்கை எட்டு மாதங்களாக இருக்கும்போது அவளைக் கொன்றான். கடைசியாக அண்டை வீட்டில் வசித்த ஒரு ஆறு மாதக் குழந்தையை கழுத்தை நெரித்துக் கொன்று, அதை புதைத்தும் உள்ளான்.

காவல் துறை அவனை பிடித்தபோது, சாடா தான் செய்த கொலைகள் குறித்து எந்தவொரு வருத்தமும் தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டது. கொலைகளைப் பற்றி அவனிடம் கேட்டபோது அவன் சிரித்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

அவனை பரிசோதித்த மனநல வல்லுநர் ஒருவர் சாடா கொலைகள் மூலம் இன்பம் பெற்றதாகக் கூறினார்.

சாடா 2016ல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டான். அவன் இருக்கும் இடம் குறித்த தகவல் இல்லை.