குஜராத்: கள்ளச்சாராயம் குடித்த 30 பேர் மரணம்

குஜராத்: கள்ளச்சாராயம் குடித்த 30 பேர் மரணம்

1 mins read
365bc86f-9d48-4cd4-a52d-13167e4cdaa6
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர். படம்: ஏஎஃப்பி -

அக­ம­தா­பாத்: குஜ­ராத் மாநி­லத்­தில் கள்­ளச்­சா­ரா­யம் குடித்­த­வர்­களில் 30 பேர் பலி­யா­கி­னர்.

இதை­ய­டுத்து கள்­ளச்சாரா­யம் காய்ச்­சி­ய­வர்­களை அம்­மா­நில காவல்­துறை வலை­வீ­சி தேடி வருகிறது.

குஜ­ராத் மாநி­லத்­தில் மது­விலக்கு அம­லில் உள்­ளது. இதனால் கள்­ளச்­சா­ரா­யம் தயா­ரிப்­போர் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­பதால் அம்­மா­நில காவல்­து­றை­யினர் எப்­போ­துமே தீவிர கண்­கா­ணிப்பை மேற்­கொள்­வர்.

இந்­நி­லை­யில், கடந்த சில தினங்களாக அக­ம­தா­பாத், போட்டட் மாவட்­டங்­களில் சட்­ட­விரோ­த­மாக தயா­ரிக்­கப்­பட்ட கள்­ளச்­சா­ரா­யம் விற்­கப்­பட்­டுள்­ளது. இதை அப்­ப­கு­தி­க­ளைச் சேர்ந்த பல­ரும் வாங்­கிக் குடித்­துள்­ள­னர்.

ஆனால் அந்­தச் சாரா­யமே அவர்­க­ளுக்கு நஞ்­சா­னது. கள்­ளச்­சா­ரா­யம் குடித்த சில மணி நேரங்­களில் உடல்நலக் குறைவு, மயக்­கம் கார­ண­மாக பல­ருக்கு அவதி தொடங்­கி­யது. அவர்­கள் அனை­வரும் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். ஐம்­பது பேருக்­கும் மேல் சிகிச்சை பெற்று வரு­வ­தா­கக் கூறப்­படும் நிலை­யில், முப்­பது பேர் மாண்­டு­விட்­ட­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

பலி எண்­ணிக்கை அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்று காவல்­துறை தரப்­பில் கூறப்­ப­டு­கிறது.