கோல்கத்தா: அபுதாபியைத் தளமாகக் கொண்டுள்ள 'எட்டிஹாட் ஏர்வேஸ்' நிறுவனம், கோடைக்கால விமானப் பயணச்சீட்டு விற்பனையை அறிவித்துள்ளது.
கோடைக்காலத்தில் வெளிநாடு களுக்குப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ) பயணிகளை இலக்காகக் கொண்டு விமானப் பயணச்சீட்டு விற்பனையை அறிவித்துள்ளது. அபுதாபியில் இருந்து இந்தியாவின் கோல்கத்தாவுக்குச் சென்று வருவதற்கான 'இக்கானமி' பிரிவு இருவழி விமானப் பயணச்சீட்டின் விலை 995 திர்ஹாமிலிருந்து (S$361) தொடங்குகிறது. மில்லியன்கணக்கான இந்திய நாட்டவர்கள் யுஏஇயில் வசித்து, வேலை செய்து வருவதால், யுஏஇ-இந்தியா பயணப்பாதை பரபரப்பான பாதைகளில் ஒன்றாக விளங்குகிறது. அபுதாபிக்கும் கோல்கத்தாவுக்கும் இடையே தினசரி விமானச் சேவைகளை எட்டிஹாட் ஏர்வேஸ் ஞாயிறன்று (மார்ச் 26) மீண்டும் தொடங்கியுள்ளது.
மார்ச் 31ஆம் தேதிவரை சிறப்புக் கட்டணத்தில் விமானப் பயணச்சீட்டுகளை வாங்கும் பயணி கள் அவற்றை மே 1க்கும் ஜூன் 15க்கும் இடைப்பட்ட காலத்தில் பயன்படுத்தலாம் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.

