இந்தியாவில் கடன் அட்டை வெளியிட ஆப்பிள் திட்டம்

இந்தியாவில் கடன் அட்டை வெளியிட ஆப்பிள் திட்டம்

1 mins read
f941a8c5-0854-4b79-98e1-8cf1d5a39d1a
ஆப்பிள் நிறுவனம் தனது கடன் அட்டையை இந்தியாவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது. - படம்: இணையம்

புதுடெல்லி: அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் தனது சொந்த கடன் அட்டையைத் தொடங்க ஆயத்தமாகி வருவதாக தகவல்கள் தெரிவித்தன.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவுக்கு வருகையளித்தார். அப்போது அவர் ஹெச்டிஎஃப்சி வங்கி தலைமை நிர்வாகியும் நிர்வாக இயக்குநருமான சஷிதர் ஜெகதீஷனை சந்தித்தார்.

ஆப்பிள் நிறுவனம் இந்திய தேசிய பணப் பரிவர்த்தனை கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்றும் இந்தியாவில் ‘ஆப்பிள் பே’ என்ற செயலியைத் தொடங்குவதற்கு அந்த அமெரிக்க நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது என்றும் தகவல்கள் தெரிவித்து இருக்கின்றன.

குறிப்புச் சொற்கள்