தேஜஸ் எம்கே 2 போர் விமானம் 2025ல் தயாராகிவிடும்: இந்தியா

1 mins read
301ef4c6-33c9-4898-aecf-ad115af4f2c2
தேஜஸ் எம்கே 2 ரகப் போர் விமானத்தின் 90% பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் என்றும் விமான இயந்திரம் அமெரிக்கத் தயாரிப்பு என்றும் கூறப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

சண்டிகர்: இந்திய விமானப்படையின் தேஜஸ் எம்கே 2 எனும் இலகு ரகப் போர் விமானம் 2025ஆம் ஆண்டுக்குள் தயாராகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

விமானத்தைத் தயாரிக்கும் இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனம் (எச்ஏஎல்) இதனைத் தெரிவித்தது.

அந்த விமானத்தின் 90 விழுக்காட்டு பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படுபவை என்றும் விமான இயந்திரம் அமெரிக்கத் தயாரிப்பு என்றும் நிறுவனம் குறிப்பிட்டது.

நிறுவனம் இதற்குமுன் தயாரித்து இந்திய விமானப்படைக்கு வழங்கிய தேஜஸ் எம்கே 1 ரகப் போர் விமானத்தைவிட எம்கே 2 ரக விமானம் 20 விழுக்காடு பெரிதாக இருக்கும்.

அதிநவீனக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும் இவ்விமானம் கூடுதல் ஆயுதங்களைச் சுமந்து செல்ல உதவும். விமான இயந்திரங்களை வாங்குவது தொடர்பில் ஜூன் 22ஆம் தேதி அமெரிக்காவின் ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியிருப்பதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இதற்குமுன் இந்தியப் போர் விமானங்களுக்கான இயந்திரங்கள் பிரான்ஸ் அல்லது இங்கிலாந்திடமிருந்து வாங்கப்பட்டன. தேஜஸ் எம்கே 2 ரகப் போர் விமானம் ரஃபேல் போர் விமானத்தைவிடச் சிறந்ததாக இருக்கும் என்று எச்ஏஎல் கூறியது.

குறிப்புச் சொற்கள்