தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஜூலை மாதம் இந்தியாவில் வழக்கமான மழைக்காலம்’

1 mins read
caf13972-e537-4b83-8f36-13313a0d1de4
புதுடெல்லியின் கனமழை. - படம்: இபிஏ

புதுடெல்லி: இந்தியாவில் இந்த ஜூலை மாதம் வழக்கமான அளவு மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஜூன் மாதம் இந்தியாவில் வழக்கத்தைவிட கிட்டத்தட்ட 10 விழுக்காடு குறைவான மழை பொழிந்தது. அதைத் தொடர்ந்து ஜூலை மாதம் விவசாயிகளுக்கு உகந்த வகையில் மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளிலும், கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவிலும், தென் தீபகற்ப பகுதிகளிலும் வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இயல்பானதாக இருக்கும்.

எனினும் வடமேற்குப் பகுதியில் வழக்கத்தைவிட குறைவாகவே மழை பொழியும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா மற்றும் இந்தியாவின் மேற்கு பகுதிகளில் மழைப்பொழிவு குறைவாக இருக்கும் என்று எதிர்பாக்கப்படுவதால் விவசாயம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ஜூலையில் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பநிலை என்றையும்விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகின் ‘இக்குவேட்டர்’ கோட்டுக்கு அருகே இருக்கும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் எல் நினோ பருவநிலை முறையின் தாக்கம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக இந்திய வானிலை நிலையம் தெரிவித்தது.

இந்தியாவில் வடமேற்கு பகுதி தவிர மற்ற இடங்களில் பருவமழை இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்