பாறாங்கற்கள் விழுந்து பக்தர்கள் நால்வர் பலி, அறுவர் காயம்

பாறாங்கற்கள் விழுந்து பக்தர்கள் நால்வர் பலி, அறுவர் காயம்

1 mins read
f00ae19d-52b6-41ab-ac51-9b9b8f1da00b
பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததால் நசுங்கிப்போன வாகனங்கள். - படம்: பிடிஐ

டேராடூன்: பக்தர்கள் சென்ற வாகனங்கள்மீது பாறாங்கற்கள் விழுந்து நசுக்கியதில் நால்வர் உயிரிழந்தனர்; அறுவர் காயமுற்றனர்.

இச்சம்பவம் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் திங்கட்கிழமை இரவு 9.30 மணியளவில் நிகழ்ந்தது.

இடைவிடாத மழையாலும் பாறைகள் உருண்டு விழுந்ததாலும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டதாக மீட்புப் படையினர் கூறினர்.

பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் கங்கோத்ரி நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்டது.

“பாறாங்கற்கள் உருண்டு விழுந்ததில் மூன்று வாகனங்கள் நசுங்கிப்போயின. அவற்றிலிருந்த பக்தர்களில் நால்வர் மாண்டுவிட்டனர்,” என்று மாவட்டப் பேரிடர் மேலாண்மை அலுவலர் தேவேந்திர பட்வால் கூறினார்.

“செவ்வாய்க்கிழமை காலையில் மீட்புப் பணி தொடங்கியது. இதுவரை மூன்று உடல்கள் மீட்கப்பட்டுவிட்டன. இன்னும் ஒருவரின் உடல் வாகனத்திலேயே உள்ளது. காயமுற்ற பக்தர்கள் அறுவர் அருகிலுள்ள சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்றும் திரு பட்வால் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்