இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.35 மணியளவில் எம்எல்வி-3 உந்துகணை மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
அவ்விண்கலம் பூமியிலிருந்து கிட்டத்தட்ட 179 கிலோமீட்டர் தொலைவில் அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் சோமநாத் தெரிவித்தார்.
‘பாகுபலி’ எனக் குறிப்பிடப்படும் இவ்விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி நிலவில் இறங்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது.
பிரான்சில் இருந்தவாறே இந்நிகழ்வைக் கவனித்து வந்த இந்தியப் பிரதமர் மோடி, “இந்தியாவின் விண்வெளி சாகசத்தில் சந்திரயான்-3 புதிய அத்தியாயம் படைத்துள்ளது. இந்த மகத்தான சாதனை நம் விஞ்ஞானிகளின் இடையறாத அர்ப்பணிப்புக்குச் சான்றாகும்,” என்று பாராட்டியுள்ளார். படம்: ஏஎஃப்பி


