தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அசாமில் வெள்ளம் - 13 மாவட்டங்களில் நூறாயிரம் பேர் பாதிப்பு

1 mins read
0d267365-27d4-48b7-8f38-02d69ccaf15e
மோரிகன் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிற்றூரில், வெள்ளநீர் சூழ்ந்துள்ள பகுதியில் உள்ள ஒரு கோயிலுக்கு பக்தர்கள் படகில் செல்கின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

கவுகாத்தி: அசாமில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பல மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

அம்மாநிலத்தின் 13 மாவட்டங்களில் கிட்டத்தட்ட நூறாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 371 சிற்றூர்களில் வெள்ளத்தால் போக்குவரத்து முடங்கிய நிலையில் மின்சாரமின்றி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது.

கிட்டத்தட்ட 98,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்[Ϟ]படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்கு பெயர் பெற்ற யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான காசிரங்கா தேசிய பூங்காவை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

காட்டு விலங்குகளைக் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காட்டுவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அசாம் மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் இதுவரை 8 பேர் உயிரிழந்து விட்டனர்.

டிகோவ், பிரம்மபுத்திரா நதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளப்[Ϟ]பெருக்கால் மாநிலத்தின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கனமழை காரணமாக சுமார் 3,653 ஹெக்டேருக்கும் அதிகமான வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.

மேலும் ஒன்பது மாவட்டங்களில் சாலைகள், பாலங்கள் ஆகியவை சேதமடைந்து போக்குவரத்து முடங்கியுள்ளது. 17 மாவட்டங்களைச் சேர்ந்த 441 கிராமங்களை வெள்ளம் மோசமாகப் பாதித்துள்ளது.

மாநிலத்தில் 85 நிவாரண முகாம்களில் 3,152 பேர் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்